விஜய் பட வில்லன் நியூயார்க்கில் திடீர் கைது… துருவி துருவி விசாரணை.!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 1:49 pm
விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகரை நியூயார்க் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் நீல் நிதின் முகேஷ் கத்தி படத்தில் விஜய்க்கு HANDSOME வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். மும்பையை சேர்ந்த இவர் 1988ல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் படியுங்க : ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!
2007ல் இந்தியில் வெளியான ஜான கட்டார் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஏஆர் முருகதாஸ்.
2014ல் வெளியான கத்தி படம் மாபெரும் ஹிட் அடித்தது. விஜய் கேரியரில் முக்கிய படமாக உள்ள கத்தி படத்தில் அழகான வில்லன் ரோலில் நீல் நிதின் முகேஷ் நடித்திருப்பார். தொடர்ந்து இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நியூயார்க் சென்ற நீல் நிதின் முகேஷை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை,போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவில் நுழைந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் நடிகர் நீல் நிதினோ தான் ஒரு இந்தியர் என்று கூறியும் போலீசார் நம்பவில்லை.
4 மணி நேரம் நீல் நிதிஷை கைது செய்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட நீல் நிதிஷ், பின்னர் கூகுளில் தன்னுடைய பெயரை தேடச் சொல்லிய பிறகு தான் போலீசார், அவர் ஒரு இந்திய நடிகர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த கசப்பாவன சம்பவம் குறித்து நீல் நிதிஷ் தன்னுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.