சிங்கக்குட்டியை பரிசாக அளித்த யூடியூபர்.. 5 நிமிடம் ‘அதை’ செய்யச் சொன்ன கோர்ட்!
Author: Hariharasudhan5 February 2025, 11:09 am
பாகிஸ்தானில் திருமணப் பரிசாக சிங்கக்குட்டியைப் பெற்ற பிரபல யூடியூபருக்கு நூதன தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ரஜபட். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்தத் திருமணத்தில், அவரது நண்பரும், பிரபல யூடியூபருமான ஓமர் டோலா என்பவரும் பங்கேற்ரு உள்ளார். மேலும், அவர் தனது நண்பருக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை அளிக்க முடிவு செய்துள்ளார்.
இதன்படி, ஒரு சிங்கக்குட்டியை ரஜபட்டுக்கு ஓமர் டோலோ திருமணப் பரிசாக வழங்கி உள்ளார். இது அங்கு இருந்தோரிடையே வியப்பையும், சற்று அச்சத்தையும் கொடுத்துள்ளது. ஆனால், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை விமர்சனங்களாக பதிவிட்டு உள்ளனர். பின்னர், இந்த விவகாரம் வனத்துறையினர் வரை சென்று உள்ளது. இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த வன அலுவலர்கள், சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் சண்டை போட்ட ராகுல் டிராவிட்.. தீயாய் பரவும் வீடியோ!
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதி, யூடியூபர் ரஜபட், உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டியை பராமரிக்கத் தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், ஒவ்வொரு மாதமும் சுமார் 5 நிமிடங்கள், மக்களுக்குத் தேவையான ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும் எனவும் நூதன தண்டனையை அளித்துள்ளார்.