’வடிவேலு கூட நடிச்சா மார்க்கெட் போயிடும்’.. மறுத்த பிரபல நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Author: Hariharasudhan
5 February 2025, 12:33 pm

வடிவேலு – கோவை சரளா காம்போ திரையில் வெற்றி அடைந்தது எப்படி என இயக்குநர் வி.சேகர் அளித்துள்ள பேட்டியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை: ‘அவரு யாருன்னே தெரியல.. அவருகூட நடிச்சா மார்க்கெட் போய்டும்.. அடுத்து எப்டி நான் கவுண்டமனி, செந்தில் சார் கூட எல்லாம் நடிப்பேன்..’ என வடிவேலுவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் நடிகை கோவை சரளா. இது சொன்னது 1990 காலக்கட்டம்.

ஆம், நாம் இன்று தொலைக்காட்சி சேனல்களிலும், யூடியூப் வீடியோக்களிலும், இன்ஸ்டா மீம்ஸ்களிலும் வலம் வரும் வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறும் கோவை சரளா காம்பினேஷன் காட்சிகளுக்கு முன்னால் தான் இந்த வார்த்தைப் போர் நடந்துள்ளது என்கிறார் இயக்குநர் வி.சேகர்.

இவரது படங்களுக்காக தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உள்ளது. குறிப்பாக, பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஆகிய படங்களுக்கான ரசிகர்கள் நாமாக கூட இருக்கலாம்.

V Sekar about Vadivelu Kovai Sarala combo

ஆனால், இந்த பெரும்பாலான படங்களில் தான் கோவை சரளா, வடிவேலுவை பந்தாடும் காட்சிகளைக் கண்டு அக்காலத்து இல்லத்தரசிகள் மகிழ்ந்ததாக பேச்சு உண்டு. ஆனால், இந்த காம்போ முதன் முதலில் திரையில் தோன்றியதால் ஒரு பிரிவும் ஏற்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

கவுண்டமனி – செந்தில் பிரிவு: இதனை, அதன் இயக்குநரே ஒத்துக் கொண்டுள்ளார். இது குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடன் கவுண்டமனி, செந்தில் பயணித்து வந்தனர். அப்போது, வடிவேலு ஒரு அறிமுகமே. அதற்கு முன்னதாக, வடிவேலு அழைத்து தேவர் மகன் பார்த்தேன். ஆனால், அவனோ ஒல்லி. எனவே, அவனுக்கு ஒரு ஜோடி போட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

எனவே, கோவை சரளாவை அனுகினேன். அவரோ, அப்போது கமல்ஹாசன், பாக்யராஜ் ஆகியோருடன் ஜோடியாக நடித்த நேரம். எனவே, வடிவேலு உடன் நடித்தால் என்னுடைய மார்க்கெட் போயிடும் என்று கோவை சரளா கூறினார். பின்னர், அவரை சமாதானப்படுத்தினேன்.

இதையும் படிங்க: ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!

இதனிடையே, கவுண்டமனியும், செந்திலும் என் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால், மீண்டும் கோவை சரளா பின்வாங்கினார். இருப்பினும், மீண்டும் நான் பேசி அவரை நடிக்க வைத்தேன். படம் வெளியான பிறகு, இருவரது ஜோடியும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் பேச்சு அடியானது. இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு வடிவேலுவின் திறமை மீது நம்பிக்கை இருந்தது” எனத் தெரிவித்துள்ளார் வி.சேகர். என்னதான் சொன்னாலும், வடிவேலு – கோவை சரளா காம்போ பெஸ்ட் தான்.

  • DD Neelakandan viral video ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!
  • Leave a Reply