‘கோட்’ சாதனையை துவம்சம் செய்த அஜித்…டாப் கியரில் விடாமுயற்சி..!
Author: Selvan5 February 2025, 1:04 pm
டிக்கெட் முன்பதிவில் பட்டையை கிளப்பும் ‘விடாமுயற்சி’
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பெப்ரவரி 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண இருப்பதால்,உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்களை புக் செய்து வருகின்றனர்.
![Vidamuyarchi box office collection](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/02/vida2-2.jpg)
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளே விஜய் நடித்த கோட் படத்தை விட,பல மடங்கு வசூல் சாதனை புரிந்துள்ளது.கிட்டத்தட்ட முதல் நாளில் மட்டும் பிரபல ‘புக் மை ஷோ’ மூலம் 45 ஆயிரம் டிக்கெட் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் கோட் படம் முதல் நாளில் வெறும் 10 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது.
இதையும் படியுங்க: ‘எந்திருச்சு வெளியே போயா’… கதை சொல்ல வந்த மிஷ்கினை அவமரியாதை செய்த பிரபல நடிகர்!
மேலும் அடுத்தடுத்த நாட்களிலும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை மின்னல் வேகத்தில் விற்றுள்ளது.இதுவரைக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.இதனால் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ள ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் சுமார் 1000 திரையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.