‘எந்திருச்சு வெளியே போயா’… கதை சொல்ல வந்த மிஷ்கினை அவமரியாதை செய்த பிரபல நடிகர்!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 12:29 pm
கதை சொல்ல வந்த மிஷ்கினை, எழுந்திருச்சு போயா என பிரபல நடிகர் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனி ரகமாக படம் எடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என வித்தியாசமான கதைக்களத்துடன், திரைக்கதையை அமைப்பதில் அரக்கனாக செயல்படுபவர் மிஷ்கின்.
இதையும் படியுங்க : கிளாம்பாக்கத்தில் வடமாநிலப் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல்.. வலுக்கும் கண்டனம்!
உயிரோட்டம் உள்ள திரைக்கதையை அமைக்கும் இவர், அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாட்டில் ராதா பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, தகாத வார்த்தைகளையும், பிறரை காயப்படுத்தும் விதமாக மிஷ்கின் பேசியது கண்டனங்களை குவித்தது.
மிஷ்கினை ஒருமையில் திட்டிய பாண்டியராஜன்
இந்தநிலையில் கதை சொல்ல வந்த மிஷ்கினை எழுந்திருச்சி வெளிய போயா என ஒருமையில் நடிகர் திட்டி அனுப்பிய சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2008ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் அஞ்சாதே. நல்ல கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் கொண்டாடினர். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.
இந்த கேரக்டரில் நடிக்க வைக்க முதலில் பாண்டியராஜனை மிஷ்கின் அணுகியுள்ளார். அப்போது வில்லன் ரோலில் நடிக்கவே முடியாது என பாண்டியராஜன் கூறியுள்ளார்.
பலமுறை போராடி மிஷ்கின் பாண்டியராஜனிடம் அந்த ரோலில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கியுள்ளார். ஆனாலும் மீசை எடுக்க வேண்டும் என மிஷ்கின் சொன்னதால் கடுப்பான பாண்டியராஜன், எந்திருச்சு வெளிய போயா என ஒருமையில் திட்டியுள்ளார்.
17 வயசுல வைத்த மீசையை இப்ப வரைக்கும் எதுக்காகவும் எடுத்ததில்லை என்று கொந்தளித்துள்ளார் பாண்டியராஜன். பின்னர் கொந்தளித்த அவரை மீசை எடுக்க வைத்துள்ளார் மிஷ்கின். முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் பாண்டியராஜன் நடித்தது வரவேற்பை பெற்றது.