ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!
Author: Selvan5 February 2025, 4:07 pm
வைரலான டிடி இன்ஸ்டா ரீல்
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்கள் பலரை கவர்ந்தவர் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
கலகலன்னு பேசும் இவர்,எப்போதும் சிரித்த முகத்துடன்,யாரையும் புண்படுத்தாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருப்பதால் இன்றும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.இவரை பார்த்து எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி என்றால் வயது அதிகரித்தாலும் உங்கள் அழகு மட்டும் எப்போதும் இளமையாக உள்ளதே,அது எப்படி என்ற கேள்வி தான்,அதுமட்டுமில்லம்ல இவர் தன்னுடைய உடல் மற்றும் அழகு தோற்றத்திற்காக மிகவும் மினக்கெடுவார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து,பின்பு இருவரும் பிரிந்தனர்.அதன் பிறகு பலரும் டிடி-யின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதித்து வந்தனர்.அதை பற்றி எதுவும் கவலைப்படாமல் எப்போதும் சமூகவலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டிருந்தார்.
இதையும் படியுங்க: 60 வயது நடிகருடன் காதலா…பண வெறியில் மனைவி…பிரபல நடிகையின் முதல் கணவர் ஓபன் டாக்..!
இந்த நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாவில் பதிவிட்ட ஓர் வீடியோ மற்றும் கேப்சன் படு வைரல் ஆகி வருகிறது.அதாவது SPB மற்றும் ஜானகி பாடிய ‘ஜெர்மனியில் சந்தித்தேன்’ என்ற பாடலில் வரும் “காதல் நாயகன் பார்வை பட்டதும் நான் மலர்ந்தேன்” என்ற வரிகளுக்கு ரீல்ஸ் எடுத்து அதை பதிவிட்டுள்ளார்.மேலும் அவர் அந்த வீடீயோவிற்கு கீழே என்ன கேப்சன் போட்டுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..
தற்போது இந்த வீடீயோவை நெட்டிசன்கள் பலர் லைக் செய்து கமெண்ட் பண்ணி வருகின்றனர்.