கட்டிடம் கட்ட பூமி பூஜை போடும் போது சோகம்.. உயிரோடு மண்ணில் புதைந்து 3 பேர் பலி!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 5:05 pm
ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டும் பணி நடைபெற்றது. தரைத்தளத்திற்கு கீழ் செல்லர் பகுதி அமைப்பதற்காக பூமி ஆழமாக தோண்டப்பட்டது.
இதையும் படியுங்க : பல்பு மாட்ட வந்த பாலமுருகன்.. அலறிய 78 வயது மூதாட்டி : மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரம்!
அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து மரணம் அடைந்து விட்டனர்.
அவர்களை உயிருடன் இருப்பதற்கு சக தொழிலாளர்கள் எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்து இறந்து போன மூன்று தொழிலாளர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.