இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!
Author: Selvan6 February 2025, 1:01 pm
விடாமுயற்சி சுட்ட கதையா..புது சிக்கலில் படக்குழு
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி அஜித் ரசிகர்களின் பல நாள் கனவு நிறைவேறியுள்ளது.இதனால் உலக முழுவதும் இருக்கக்கூடிய அஜித் ரசிகர்கள் மேள தாளங்களுடன்,பட்டாசு போட்டு வெகு விமர்சியாக திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
படம் பார்த்த பின்பு பலரும் நேர்மறையாமான விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.படம் ஏற்கனவே பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரீமேக் பிரச்சனையால் படத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள்,பிரேக்டவுன் என்கின்ற படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டதால்,அந்த படத்தை தயாரித்த நிறுவனம்,ரீமேக் உரிமைக்காக 150 கோடி கேட்டது.அதன் பிறகு விடாமுயற்சி பட நிறுவனமான லைக்கா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 11 கோடிக்கு பேசி முடித்து,படத்தின் லாபத்தில் பங்கு கொடுப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று படம் வெளியான உடன் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் வந்துள்ளது.அதாவது மற்றொரு படமான “லாஸ்ட் சீன் அலைவ்” என்ற படத்தையும் காப்பியடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் பிரேக்டவுன் படக்குழுவை போல லாஸ்ட் சீன் அலைவ் பட நிறுவனமும் பிரச்சனை செய்தால்,விடாமுயற்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.