நக்கல் மன்னன் கவுண்டமணியின் கவுண்டர் அட்டாக்…’ஒத்த ஓட்டு முத்தையா’ பட ட்ரைலர் வெளியீடு..!
Author: Selvan6 February 2025, 1:59 pm
பல வருடங்களுக்கு பிறகு கம் பேக் கொடுக்கும் காமெடி கிங்
தமிழ் சினிமாவில் காமெடி கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி.சமீபத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.அப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கவுண்டமணியின் நக்கல் பேச்சை ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.அரசியலை மையமாக வைத்து காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது.இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணியுடன்,யோகி பாபு,மொட்டை ராஜேந்திரன்,வையாபுரி,கூல் சுரேஷ்,முத்துக்காளை என பல காமெடி பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்க: இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.வரும் 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி பாராட்டைப்பெற்று வருகிறது.மேலும் ட்ரைலரில் கவுண்டமணியின் நக்கல் காமெடிகள் ரசிகர்களை குதூகலப்படுத்துகிறது.