13 வருடங்களுக்கு பிறகு மங்காத்தா அஜித்தை பழிவாங்கிய திரிஷா… விடாமுயற்சி சீக்ரெட்ஸ்!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2025, 5:02 pm
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கல் இன்று வெளியாகின. எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் மகிழ் திருமேனி ஏமாற்றம் அளிக்கவில்லை என்றே சொல்லலாம்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விடாமுயற்சி படத்தின் கதைகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக திரிஷாவுக்கு நெகட்டிவ் ரோல் என்பது படம் வெளியான 2 மணி நேரத்திலேயே கசிந்தது.
மங்காத்தாவில் துரோகம் செய்த அஜித்தை விடாமுயற்சியுடன் வீழ்த்திய திரிஷா
இதையடுத்து விடாமுயற்சி படம் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அஜித்துக்கு திரிஷா துரோகம் செய்வது போல இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இதை 13 வருடங்களுக்கு முன்னர் வெளியான மங்காத்தா படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
மங்காத்தா படத்தில் திரிஷாவை காதலிப்பது போல நடித்திருப்பார் அஜித். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு மனைவியாக நடித்து திரிஷா துரோகம் செய்துள்ளதாகவும், 13 வருடம் கழித்து திரிஷா பழிவாங்கியுள்ளதாக குறிப்பிட்டு மீம்ஸ்களை தட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், மௌனம் பேசியதே, விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96 படத்தில் திரிஷாவை காதலிக்கும் நாயகர்களை ஏமாற்றியதாகவும், அதனால் தான் மங்காத்தா படத்தில் திரிஷாவை அஜித் ஏமாற்றியதாகவும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.