கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை.. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் : வழக்கறிஞர்கள் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2025, 6:11 pm
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
இதையும் படியுங்க: ஆட்சியர் பலிகடாவா? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி அதே பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் யாரும் பிணை மனு தாக்கல் செய்யவும் வழக்கில் ஆஜராகவோ கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை ஓசூர் போச்சம்பள்ளி ஆகிய நீதிமன்ற வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு வழக்கு சங்கம் சார்பில் ஆதரவாக மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது