IND VS ENG 1ST ODI:இங்கிலாந்தை அலறவிட்ட இந்திய வீரர்கள்…தொடரும் வெற்றி வேட்டை..!
Author: Selvan6 February 2025, 9:57 pm
ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை ருசித்த இந்தியா அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலையில் உள்ளது.ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில்,தற்போது ODI தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை திணறடித்துள்ளது.
நாக்பூரில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது,அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்கவீரர்களான சால்ட் மற்றும் டக்கட் அதிரடியாகி ஆடி ரன்களை மின்னல் வேகத்தில் குவித்து வந்தனர்.அப்போது சால்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.
இதையும் படியுங்க: 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!
அதன்பிறகு இங்கிலாந்து பேட்டர்களை ரன்களை குவிக்க விடாமல் அசத்தலான பவுலிங் மற்றும் பீல்டிங்கால் இந்திய வீரர்கள் பொட்டலம் கட்டினார்கள்.இங்கிலாந்து அணி 47.4 ஓவர் முடிவில் 248 ரன்களை எடுத்தது, 249 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றதை அளித்தனர்,தொடர்ந்து தடுமாறி வரும் ரோஹித் இந்தமுறையும் ஜொலிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கில் அணியை வேகமாக சரிவில் இருந்து மீட்டு ரன்களையும் குவித்தனர்.அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் நிதானமாக ஆடி இந்திய அணியை சீக்கிரமாக வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் கில்,இதனால் இந்திய அணி 38.4 வது ஓவரில் ஆறு விக்கெட்டைகளை இழந்து மிக எளிதாக வெற்றியை ருசித்தது.