சிம்பு கூட நடிக்க ஆசையா..அப்போ இத மட்டும் பண்ணுங்க..படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்.!

Author: Selvan
7 February 2025, 12:58 pm

சிம்பு கூட சேர்ந்து நடிக்க ஓர் அறிய வாய்ப்பு

சிம்பு தனது 42 வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இந்த நிலையில் தற்போது சிம்புவின் புதிய பட ஒன்றில் நடிக்க ஆட்கள் தேவை என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Simbu 48th movie casting call

சிம்பு தன்னுடைய 49-வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது,அதில் அவர் கையில் ஒரு புக்குடன் ரத்தக்கரையோடு ஒரு கத்தி வைத்திருந்தார்.இதில் சிம்பு ஒரு பொறியல் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார்,கிரைம் த்ரில்லரில் இப்படம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்க: வசூலை வாரிக் குவிக்கும் விடாமுயற்சி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்போது படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற இருப்பதால்,படத்தில் நடிக்க நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.இதற்கான போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய X-தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நிமிடம் உங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வீடீயோவை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.மேலும் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸை அனுப்ப வேண்டாம் என கூறி இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் நம்பரை கொடுத்துள்ளார்கள்.

இதனால் நடிப்பில் ஆர்வம் இருக்க கூடிய நபர்கள் மற்றும் சினிமாவில் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

  • Actor Abbas interview நான் தான் அப்பாவா…பெற்ற குழந்தையை வைத்து நடிகர் ‘அப்பாஸ்’ செய்த அதிர்ச்சி செயல்..!
  • Leave a Reply