நான் அவருக்கு ஜோடியா…பிரபல இயக்குனர் படத்தை தூக்கி வீசிய நடிகை த்ரிஷா..!
Author: Selvan7 February 2025, 2:10 pm
ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த திரிஷா
தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.இவர் அஜித்,விஜய்,சூர்யா உட்பட பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
பல படங்களில் நடித்து வரும் திரிஷா பிரபல இயக்குனர் ராஜமௌலி படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்துள்ளார்.அதற்கு காரணம் அப்படத்தில் நடித்த ஹீரோ தான்,கடந்த 2010ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் உருவான படம் ‘மர்யாதா ராமன்னா’,இப்படத்தில் சுனில் ஹீரோவாக நடித்திருப்பார்.
இதையும் படியுங்க: சிம்பு கூட நடிக்க ஆசையா..அப்போ இத மட்டும் பண்ணுங்க..படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்.!
இவருக்கு ஜோடியாக நடிக்க இயக்குனர் ராஜமௌலி த்ரிஷாவை அணுகியபோது,அவர் மறுத்துவிட்டார் காரணம்,அதற்கு முன்பு வரை காமெடி ரோலில் மட்டுமே நடித்து வந்த சுனிலுக்கு ஜோடியாக நடித்தால் தன்னுடைய கரியர் பாதிக்கும் என நடிக்க மறுத்துள்ளார்,அதன்பிறகு படக்குழு சலோனி அஸ்வாணி என்பவரை நடிக்க வைத்து படமும் மாஸ் ஹிட் அடித்து,வசூலை வாரி குவித்தது.
இப்படம் நடிகர் சுனிலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பிரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.இதன் பிறகு ராஜமௌலி தன்னுடைய எந்த படத்திலும் நடிகை த்ரிஷாவை அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திரிஷா தற்போது கமலின் தக் லைப் படத்திலும்,அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து முடித்துள்ளார்,மேலும் ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.