அதிமுகவுடன் கைக்கோர்த்து களத்தில் குதித்த திமுக கூட்டணி கவுன்சிலர்கள்… கோவை மாமன்ற கூட்டத்தில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2025, 1:41 pm

சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா சந்திரசேகர், ராமேஷ் உள்ளிட்டவர்கள் ட்ரோன், மற்றும் பதாகைகளை கையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த ஆட்டோ ஓட்டுநர்.. தினமும் பள்ளிக்கு செல்லும் போது கொடூரம்!

இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்தும், வரி விதிப்பை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க, கொ.ம.மு.க கட்சிகள் மேயரின் முன்பு திண்டு மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து கோசங்களை எழுப்பி முற்றுகையிட்டனர்.

மேலும் மாமன்ற ஊட்டத்தொடரில் இருந்து வெளியேறியவர்கள். மாமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கோசங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK Alliance Councilors

கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது.கோவை மாநகராட்சி கார்ப்பரேட் பைனான்ஸ் கம்பெணியாக செயல்பட்டு வருகிறது.

ட்ரோன் சர்வே என்ற பெயரில் 4 ஆயிரம் வரிகட்டியவர்களுக்கு 38 ஆயிரம் வரியும், 5 ஆயிரம் வரி கட்டிய மக்களுக்கு 1 இலட்சத்து 60 ஆயிரம் வரி விதித்து உள்ளார்கள்.

Admk Councilor Prabhakaran

ஆனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரையின் பேரில் கோவையில் மெட்ரோ திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அறிவித்தார் என்பதற்க்காக இன்று வரை செயல்படுத்தாமல் இருக்கின்றார்கள்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களில் வீடு உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக குனியமுத்தூர் சாலையை பராமரிக்காமல் குண்டும், குழியுமாக உள்ளது.

Coimbatore Admk And Dmk Alliance Councilors Protest

சாலையில் புழுதி கிளம்பி வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது. என்று அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

  • Vidaa Muyarchi special screening donation அரியவகை நோயால் குழந்தை அவதி..தியேட்டரில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…குவியும் பாராட்டு மழை..!
  • Leave a Reply