நடிகர் சோனு சூட்டை கைது செய்…காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Author: Selvan
7 February 2025, 5:05 pm

மோசடி வழக்கில் சிக்கிய சோனு சூட்

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும்,நிஜ வாழ்க்கையில் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.கொரோனா கால கட்டத்தில் கூட பல மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஏழைகளின் கொடை வள்ளல் என்று அழைக்கப்பட்டார்.

இதையும் படியுங்க: நான் தான் அப்பாவா…பெற்ற குழந்தையை வைத்து நடிகர் ‘அப்பாஸ்’ செய்த அதிர்ச்சி செயல்..!

தற்போது பல படங்களில் நடித்து வரும் சோனு சூட் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் என லூதியான நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Bollywood actor Sonu Sood legal trouble

லூதியானவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா,மோஹித் சுக்லா என்பவர் மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் போலியான ரிஜிகா நாணயத்தில் என்னை முதலீடு செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நடிகர் சோனு சூட்டிற்கு தொடர்புடையதாக கூறப்பட்டது.இதனால் விசாரணைக்கு வர,அவரை நீதிமன்றம் அழைத்தது.ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்ததால்,தற்போது லூதியான நீதிமன்றம் மும்பை அந்தேரியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்யுமாறு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அந்த அறிக்கையில் சோனு சூட்டிற்கு முறையாக சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார்,இதனால் அவரை 10-02-2025-க்கு முன் கைது செய்து நீதிமன்றம் முன் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி வழக்கில் சோனு சூட் உண்மையில் சம்மந்தப்பட்டுள்ளாரா என்பது வரும் 10-ஆம் தேதி விசாரணையில் தெரிய வரும்,இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

  • Vidamuyarchi box office collection வசூலில் அசால்ட் காட்டும் ‘விடாமுயற்சி’ …முதல் நாள் கலெக்சன் எத்தனை கோடினு தெரியுமா..!
  • Leave a Reply