திருமணமான 2 மாதத்தில்.. நாக சைதன்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சோபிதா!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 5:55 pm
நகடிர் நாக சைதன்யா நடிகை சமந்தாவும் காதலித்திது திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
நாக சைதன்யாவுக்கு வாழ்த்து கூறிய சோபிதா
இதையடுத்து நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. இருவரும் அதை ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: நடிகர் சோனு சூட்டை கைது செய்…காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் படமான தண்டேல் வெளியாகியுள்ளது. இது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை சோபிதா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறியுள்ளார்.
தண்டேல் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் போட்ட பதிவில், தண்டேல் படப்பிடிப்பின் போது நீங்கள் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். எல்லோருடன் சேர்ந்து நானும் இந்த படத்தை பார்க்க ஆவகமாக உள்ளேன், நீங்கள் கடைசியாக தாடியை வேஷ் செய்கிறீர்கள் என கணவரின் படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
சோபிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள், திருமணத்திற்கு பின் நாக சைதன்யா முகத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.