அரியவகை நோயால் குழந்தை அவதி..தியேட்டரில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…குவியும் பாராட்டு மழை..!

Author: Selvan
7 February 2025, 7:07 pm

திரையரங்கில் அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த உதவி

அரியவகை மரபணு நோயால் பாதிப்படைந்த சிறு குழந்தைக்கு அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சி நிர்வாகிகள் இணைந்து தியேட்டரில் நிதி திரட்டியுள்ள நெகிழ்ச்சியான நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி,பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க: நல்ல வேள நாம தப்பிச்சோம்…ரசிகர் சொன்ன ‘அந்த’ வார்த்தை..திரிஷா கொடுத்த ரியாக்சன்..!

அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தை நேற்று உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ரசிகர்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்,இந்த நிலையில் சென்னை திருவோற்றியோரில் உள்ள திரையரங்கில் திருவோரை சேர்ந்த தம்பதியின் ஆறு மாத பெண் குழந்தையான வருணிகா ஸ்ரீ-க்கு மருத்துவ நிதி திரட்டியுள்ளனர்.

இதற்காக பட டிக்கெட்டில் குழந்தையின் புகைப்படத்தோடு,பெற்றோருடைய வங்கியின் OR கோடையும் அச்சிட்டு ரசிகர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.மேலும் குழந்தையின் காணொளியை திரையில் சிறிது நிமிடம் இலவசாக ஒளிபரப்பு செய்தனர்.இதனால் மரபணு நோயால் பாதிப்பு அடைந்துள்ள குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரசிகர்கள் பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.

விஜய்-அஜித் ரசிகர்களின் இந்த செயலால் குழந்தையின் பெற்றோர் கண்ணீரோடு நன்றியை கூறியுள்ளனர்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி குழந்தையின் மருத்துவ செலவான 16 கோடிக்கு மேலும் நிதி திரட்ட உதவியாக மாறியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?