என்னை கொலை செய்ய போறாங்க : கோவை சிறையில் இருந்து VIDEO போட்ட ஆயுள் கைதி!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2025, 6:54 pm

கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம் என்பவர் சிறைக்குள் தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைதி விக்ரம் வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைதி விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுவது என்னுடன் இருந்த கைதியை கொலை செய்து விட்டார்கள்.

அடுத்தது நான் தான் எனக்கு ஏதோ நடந்தால் அதற்கு சக கைதியான சதீஷ், கிருபாகரன், பாலு, மோகன்ராம் என குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Life prisoner VIDEO Call from Coimbatore prison

கைதி விக்ரம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது .இது குறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு இந்த வீடியோ காட்சி பதிவு செய்ய செல்போன் எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி குறிப்பிடத்தக்கது.

  • இயக்குனர் போட்ட கண்டிஷனை மறுத்த பிரபல நடிகை…வாய்ப்பை தட்டி சென்ற ஜோதிகா..!
  • Leave a Reply