தூக்கில் தொங்கிய பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோ : அவசர போலீசுக்கு குவியும் சல்யூட்!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 7:45 pm
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாபூரில் திருமணமான பெண் ஒருவர் கதவில் உள்புறம் தாழ்ப்பாள் போட்டு கொண்டு தற்கொலை செய்யப் போகிறாள்.
உடனடியாக காப்பாற்றும்படி அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கட்டுபாட்டு அறையில் இருந்து பாலாப்பூ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் ராஜு மற்றும் தருண் ஆகியோர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் பெரிய கட்டையை கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் ஏற்கனவே தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தூக்கிட பயன்படுத்திய புடவையை அறுத்து அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதால் அந்த பெண் உயிர் பிழைத்தார். போலீசார் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுடைய பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து கவுன்சிலிங் வழங்கினர்.
இருப்பினும் சரியான நேரத்தில் உடனுக்குடன் வந்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு கான்ஸ்டபிள்களையும் உள்ளூர்வாசிகளும் சக போலீசார் அதிகாரிகள் பாராட்டினர்.