இயக்குனர் போட்ட கண்டிஷனை மறுத்த பிரபல நடிகை…வாய்ப்பை தட்டி சென்ற ஜோதிகா..!
Author: Selvan7 February 2025, 9:08 pm
ரிதம் திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா..!
தமிழ் சினிமாவில் 1990களில் சங்கமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா,இப்படத்தில் பரதநாட்டிய கலைஞராக விந்தியா நடித்திருந்தார்.
ரகுமான் ஸ்ரீ,டெல்லி கணேஷ்,விஜயகுமார்,வடிவேலு,மணிவண்ணன் தியாகு சார்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தது.இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் நடிகை விந்தியாவால் பெரிய ஹீரோயினாக வர முடியவில்லை.
ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்தி அதிமுகவில் இணைந்த விந்தியா,அதிமுக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தொடங்கினார்,தொடர்ந்து பல நேர்காணல்களில் பங்கேற்று சினிமா மற்றும் அரசியல் குறித்து பேசி வருகிறார்.
இதையும் படியுங்க: கொடியால் விழுந்த அடி..அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்..நெல்லை தியேட்டரில் பரபரப்பு.!
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார் அதில் சங்கமம் படத்துக்கு முன்பு நான் நடிக்க வேண்டிய படம் ரிதம். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் வசந்த் அழைத்தார்,ஆனால் சங்கமம் படத்தில் நடித்தால் உனக்கு ரிதம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று வசந்த் திடீர் கண்டிஷன் போட்டார்.
அவரது கண்டிஷனை நான் நிராகரித்து ,நான் சங்கமம் படத்தில் நடித்தேன்.அதனால் ரிதம் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை,எனக்கு பதிலாக ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.ஜோதிகா அப்போ தான் சினிமாவில் உள்ளே நுழைந்தார்,அஜித்தின் வாலி படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்து முடித்த அவருக்கு ரிதம் படம் பெரிய திருப்புமுனையக அமைந்தது,எனக்கு சங்கமம் வெற்றியை கொடுத்தாலும் ஜோதிகா போல் என்னால் முன்னணி நடிகையாக வர முடியிவில்லை என அந்த பேட்டியில் விந்தியா கூறியிருப்பார்.