மீண்டும் வேலையைக் காட்டத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
8 February 2025, 10:41 am

சென்னையில், இன்று (பிப்.08) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய்க்கு மேல் கட்டாயம் உயர்கிறது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (பிப்.08) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஆயிரம் ஓட்டுக்களை வாங்கிய நாம் தமிழர்.. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னிலை நிலவரம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 667 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sun TV Suresh Kumar Review About Vidaamuyarchi விடாமுயற்சி வீழ்ச்சியா இல்லை எழுச்சியா…90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் விமர்சகர் சுரேஷ் குமாரின் விமர்சனம்.. !
  • Leave a Reply