அண்ணினு கூட பாக்கல… ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணனின் மனைவி : தலைமறைவான கொளுந்தன்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2025, 11:21 am

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(44) இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சங்கீதா(35) இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள்உள்ளது.

கணவர் வெளிநாட்டில் உள்ளதால் விளாம்பட்டியில் உள்ள வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40)துபாயில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இதையும் படியுங்க : மீண்டும் வேலையைக் காட்டத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சங்கீதாவின் உடன் பிறந்த தங்கை மணிமேகலை என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சுரேஷிற்கும்,சங்கீதாவிற்கும் அடிக்கடி வாய்தகராறுநடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷிற்கும் சங்கீதாவிற்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் சங்கீதாவை அரிவாளை வைத்து கழுத்தில் வெட்டியுள்ளார்

இதில் ரத்தம் துடிதுடிக்க சம்பவ இடத்திலே சங்கீதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து சுரேஷ் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

younger brother killed his brother's wife with a sickle

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வருகின்றனர்.

  • Sai Pallavi about Vijay விஜய் மீது இப்படி ஒரு ஆசையா…ஃபீலிங்கில் நடிகை சாய் பல்லவி..!
  • Leave a Reply