‘சவதிகா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாத்தா…வைரலாகும் தியேட்டர் வீடியோ.!

Author: Selvan
8 February 2025, 12:47 pm

தாத்தா வராரு கதற விட போறாரு

அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.அஜித்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் திரையில் பார்த்ததால்,ஆட்டம் பாட்டம் போட்டு திருவிழா போல விடாமுயற்சி படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: வசூலில் வாயை பிளக்க வைத்த விடாமுயற்சி… 2வது நாளில் இத்தனை கோடி வசூலா?

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு,ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் படு வைரல் ஆனது.

Ajith Fans Celebration

அதிலும் குறிப்பாக ‘சவதிகா’ பாடல் சிறுசுகள் முதல் பெருசுங்க வரை அனைவரையும் கவர்ந்தது.தியேட்டரிலும் இப்பாட்டு வரும் போது ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் தாத்தா ஒருவர் தியேட்டரில் இந்த பாட்டு வரும் போது மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,லைக்கா நிறுவனம் தன்னுடைய X-தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

மூன்றாவது நாளாக வெற்றிகரமாக ஓடும் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று,வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!
  • Leave a Reply