என் படத்தையா வேண்டானு சொன்ன.. அனுபவிப்ப… திரிஷாவை ஓரங்கட்டிய BLOCKBUSTER இயக்குநர்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2025, 1:12 pm

நடிகை திரிஷா 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிகையாக அந்தஸ்தில் உள்ளவர். அடுத்தடுத்து ஏராளமான படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

40 வயதை கடந்தும் சினிமாவில் தொடர்ந்து சிம்மாசனம் போட்டுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் விடாமுயற்சி படம் வெளியானது. தொடர்ந்து அஜித்துடன் குட், பேட், அக்லி,விஸ்வம்பரா, ராம் என தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வருகிறார்.

எல்லா இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து நடித்த திரிஷா, மிகப்பெரிய வாய்ப்பை இழந்துள்ளார். அதாவது, பிரம்மாண்ட இயக்குநர் ராஜ மௌலியின் பட வாய்ப்பை வேண்டாம் என தட்டிவிட்டார்.

2010ல் உருவான படம் மரியாதை ராமன்னா. இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருப்பவர் காமெடி நடிகர் சுனில். இவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஜமௌலி திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Rajamouli Rejects Trisha

ஆனால் காமெடி நடிகருக்கு நான் ஜோடியாக நடிக்கணுமா, அப்படி நடித்தால் என் கெரியரே போய்விடும் என வாய்ப்பை தட்டிவிட்டார். காமெடி நடிகர் சுனில், மரியாதை ராமன்னா படம் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார்.

Block Buster Director Rejects Trisha

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் பிளாஸ்ட் மோகன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் தனது இன்னிங்சை தொடங்கியுள்ளார். பட வாய்ப்பை நிராகரித்ததால் இதுவரை ராஜமௌலி தனது படங்களில் திரிஷாவை கமிட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Naga Chaitanya emotional interview என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!
  • Leave a Reply