விடாமுயற்சி வீழ்ச்சியா இல்லை எழுச்சியா…90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் விமர்சகர் சுரேஷ் குமாரின் விமர்சனம்.. !
Author: Udayachandran RadhaKrishnan8 February 2025, 5:57 pm
சன் டிவி தொலைக்காட்சியில் திரை விமர்சனம் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, செய்திவாசிப்பாளராக இருந்தவர் சுரேஷ்குமார். இவரை 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரைட் என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்க: பராசக்தி ஹீரோ டா… ஸ்ரீ லீலாவுடன் சிவகார்த்திகேயன் செஞ்ச வேலையை பாருங்க : வைரலாகும் வீடியோ!
ஒரு படத்தை விமர்சனம் செய்வதில் நேர்த்தியானவர் என கூறுவதும் உண்டு. தற்போது அவர் விடாமுயற்சி படத்தை பற்றி விமர்சித்திதுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், படத்துக்கு பலமே அஜித் தான். அழகு பதுமையாக அறிமுகமான திரிஷா, தகாத உறவுகள் வைக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாக நடித்திருப்பார். அர்ஜூன், ஆரவ், ரெஜினா என அனைவரின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.
SunTV.-Top10
— Thileep 🇫🇷 (@Thileep_Off) February 8, 2025
Dr. #RSureshKumar … Honest Review…💯😍#விடாமுயற்சி …வீழ்ந்தது சூழ்ச்சி…💥#AjithKumar #Vidaamuyarchi #VidaaMuyarchiBlockbuster pic.twitter.com/5pYVaze4az
VFX, SFX படத்திற்கு பலம் என கூறிய சுரேஷ்குமார், விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி, வீழ்ந்தது சூழ்ச்சி என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.