அடிமேல் அடியா…லைக்காவுக்கு அதிர்ச்சி…விடாமுயற்சி மூன்றாம் நாள் வசூல்.?
Author: Selvan9 February 2025, 11:01 am
விடாமுயற்சி வசூல் சரிவா
கடந்த 6 ஆம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால் வசூல் மந்தமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

பிரேக்டவுன் ஹாலிவுட் படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம்,வழக்கமான தமிழ் படங்கள் போல் மாஸ் சீன்,காமெடி என இல்லாமல் வேறொரு ஜானரில் இருந்தது,அதுவும் குறிப்பாக அஜித்திற்கு எந்த ஒரு மாஸ் சீனும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அப்செட் ஆனார்கள்.சாதாரண ஒரு ஒன்னு லைன் ஸ்டோரியாக இருக்கும் இந்த கதையால் விமர்சன ரீதியாக படம் அடி வாங்கியிருந்தாலும் அஜித்தை திரையில் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் முதல் நாள் வசூல் கல்லா கட்டியது.
இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!
இந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.மூன்றாம் நாளான நேற்று தமிழ் நாட்டில் வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.இந்திய அளவில் 43 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.படம் 280 கோடிக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.