மீண்டும் ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு கொடுமை… உதவிய 139 : தூத்துக்குடி – ஈரோடு ரயிலில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 6:17 pm

ஈரோடு சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண். தூத்துக்குடியில் தங்கியிருந்து ஈரோட்டிற்கு சென்றுள்ளார்.துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார்.

அதே பெட்டியில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் கோவை செல்வதற்காக இந்த ரயிலில் ஏறினார். அதிக மது போதையில் இருந்த அவர் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்தார்.

இதையும் படியுங்க: தவெகவில் முதலில் காலியாகும் முக்கியப்புள்ளி? விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது சதீஷ்குமார்,இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

sexual Harassment in Moving Train

அவர்கள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான இன்று அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை, கைது
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply