பள்ளி விடுதி கழிவறையில் மாணவி மர்ம மரணம்.. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
11 February 2025, 12:29 pm

கடலூரில், பள்ளி விடுதி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்: விழுப்புரம் மாவட்டம், சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் கோவஸ்ரீ (14). இவர், கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அங்குள்ள விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, இவர் உடல்நிலை பாதித்த நிலையில் விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் அங்குள்ள கழிவறை பகுதியில் தற்கொலை செய்து இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்த தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியின் சடலத்தை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

School girl died in Hostel at Cuddalore

இந்த நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலகம் முன்பு, உயிரிழந்த மாணவி கோவிஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். தொடர்ந்து, தனது மகளை பள்ளி நிர்வாகத்தினர்தான் கொலை செய்து விட்டதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வீடியோ மூலம் காட்ட வேண்டும் எனவும், அதன் மூலம் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம் எனவும், மாணவியின் இறப்புக்கு உண்மையான விசாரணை செய்து, காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமி.. பதுங்கிய இளைஞருக்கு தேடிவந்து தர்ம அடி.. கரூரில் பரபரப்பு!

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவி சம்பந்தமான வழக்கு நெல்லிக்குப்பம் போலீசாரின் விசாரணையில் உள்ளதாகவும், அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறியதன் பேரில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?