முஸ்லீம்னா வீடு No.. கெத்து காட்டிய சின்னத்திரை பிரபலம்!

Author: Hariharasudhan
11 February 2025, 1:14 pm

முஸ்லீம் என்பதால் தனக்கு வீடு கொடுக்கவில்லை என கூறும் அறந்தாங்கி நிஷா, சென்னையில் சொந்த வீட்டுக்கு பால் காய்ச்சி சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார்.

சென்னை: “உங்கள் எல்லாருடைய ஆசிர்வாதத்தில் சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு. வீட்டுக்கு அப்பாவின் பெயர் தான் வைத்துள்ளேன். நான் பிறந்ததில் இருந்து இப்போது வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரர்கள் என்று யாரும் கிடையாது. சின்ன வயதில் ஒரு தடவைதான் அப்பா என்னை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

அதற்குப் பிறகு நான் எப்போது சென்னை என்று சொன்னாலும், இந்தா கூட்டிட்டு போறேன்மா, அந்தா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாற்றிக்க்கொண்டே இருப்பார். திரும்ப நான் சென்னையில பயணிப்பதற்கு காரணம், என்னுடைய அப்பா. அதற்குப் பிறகு என்னுடைய தமிழ். ஆறு மாதங்களாக சென்னையில வீடு தேடினேன்.

அப்போது, ஆர்டிஸ்ட்டுக்கு வீடு தர மாட்டேன், முஸ்லீம்க்கு வீடு தர மாட்டேன் என இப்படி எத்தனையோ விமர்சனங்களைச் சந்தித்ததுக்கு பிறகு, குடும்பமாக சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என முடிவெடுத்து, இப்போது வீடு வாங்கியாச்சு” என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில் கூறியுள்ளார், அறந்தாங்கி நிஷா.

Aranthangi Nisha new house

இதன்படி, சென்னை வந்த ஆரம்பத்தில் வாடகை வீடு கிடைக்க பல போராட்டங்களைச் சந்தித்ததாக கூறும் நிஷா, முஸ்லீம் என்ற காரணத்திற்காக வீடு கொடுக்கவில்லை என்றும், தற்போது சென்னையில் 1 BHK வீடு கட்டி பால் காய்ச்சி இருப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனலின் பிரபல காமெடி பேச்சாளரான அறந்தாங்கி நிஷா, பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுகளின் மூலம் கவனம் ஈர்த்து, பிக்பாஸ் 4வது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

இதையும் படிங்க: துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு துரோகம்? சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு!

மேலும், அந்த வீடியோவில் பேசிய அறந்தாங்கி நிஷா, “எப்பவுமே எல்லார் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட, நம்ம எங்க தோற்கிறோமோ அங்கதாங்க ஜெயிக்கணும். என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும், என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னுடைய தமிழும் தான் காரணம்.

எல்லாருக்குமே ரொம்ப நன்றி. என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியாக பார்ப்பதற்கும், என்னை எப்போதும் உங்களில் ஒருத்தியாக பார்ப்பதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நான் வாங்கியது பங்களா இல்லை, சிங்கிள் பெட்ரூம் வீடு. எல்லாத்தையும்விட பெரிய நன்றி இறைவனுக்கும், எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மட்டும்தான், நன்றி மக்களே” என பதிவிட்டுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!