அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை… திமுக சதி செய்கிறது : முன்னாள் அமைச்சர் காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 1:57 pm
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படியுங்க: முஸ்லீம்னா வீடு No.. கெத்து காட்டிய சின்னத்திரை பிரபலம்!
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு கே டி ராஜேந்திர பாலாஜி கடம்பூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில்,
அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெ.,படம் இல்லை என செங்கோட்டையன் அமைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செய்துள்ளது. அதிமுக கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார்.

இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார். இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.