விடாமுயற்சியில் வரும் பிரகாஷ் யார்? ரகசியத்தை உடைத்த மகிழ் திருமேனி..!

Author: Selvan
11 February 2025, 9:11 pm

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதாக அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: பிரபல நடிகர் மீது தீரா காதல்…72 கோடி சொத்தை உயில் எழுதிய தீவிர ரசிகை…

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே மகிழ் திருமேனி,இது நீங்கள் எதிர்பார்க்கிற அஜித் படம் போல் இருக்காது,இந்த படத்தை இப்படி தான் எடுக்க வேண்டும் என அஜித் எனக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து விட்டார்,அந்த வேலையை மட்டும் தான் நான் செய்துள்ளேன் என கூறியிருப்பார்.

Vidamuyarchi Twist Explained

மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் சில ட்விஸ்ட் உள்ளது,அதாவது திரிஷாக்கு இன்னொரு நபர் மீது காதல் இருப்பதாகவும்,அஜித்திடம் இருந்து விலக முடிவு எடுத்தது போல் காட்டி இருப்பார்கள்,இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் த்ரிஷாவின் அந்த காதலரான பிரகாஷ் யார் என்பதை பார்க்க ஆர்வமுடன் இருப்பார்கள்,ஆனால் கடைசி வரை அந்த நபர் யார் என்பதை காட்டாமல் படத்தை முடித்திருப்பார்.

இதைப்பற்றி சமீபத்தில் மகிழ் திருமேனியிடம் கேட்ட போது,இந்த படத்தின் எண்ட் ஓபனாக இருக்கவேண்டும் என நானும் அஜித் சாரும் விரும்பியது தான் என கூறியிருப்பார்.ஒரு வேளை லியோ படத்தில் பொய்யான பிளாஷ் பேக் காட்சி இருப்பது போல்,இதில் பொய்யான காதலர் இருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E

    Leave a Reply