கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. நிம்மதியில் நகைப்பிரியர்கள்!

Author: Hariharasudhan
12 February 2025, 10:14 am

சென்னையில், இன்று (பிப்.12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.12) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 960 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சனாதனத்திற்கு ஆபத்து வரும்போது.. விஜய் சொன்னது வேதனையே.. வானதி சீனிவாசன் கூறுவது என்ன?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 661 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply