அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… திமுக பிரமுகரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 1:39 pm

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வாங்கி தருவதாகவும், மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடமும் லட்சக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

நீண்ட நாட்கள் கடந்தும், பணம் கொடுத்தவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, அரசு வேலையும் கிடைக்கவில்லை, இது குறித்து பாதிக்கப்பட்ட, பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்ததால், திடீரென தம்பிதுரை தலைமறைவானார்.

இதையும் படியுங்க: பாஜக பிரமுகரை கொல்ல சதி… பெட்ரோல் குண்டு வீச முயன்ற மர்மநபர் : கோவையில் பதற்றம்!

இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள். கோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று தம்பிதுரை தைப்பூசம் திருவிழாவிற்க்காக வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.

DMK Executive Arrest after Cheating Public

நிலைமை மோசமாவதை உணர்ந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தம்பிதுரையின் வீட்டிற்கு வந்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply