லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போல இருக்கேன்.. ஆண் குழந்தை வேணும் ; சிரஞ்சீவியை விளாசும் நெட்டிசன்கள்!
Author: Udayachandran RadhaKrishnan12 February 2025, 2:07 pm
ஆண் வாரிசு கேட்ட சிரஞ்சீவியை நெட்டிசன்கள் கண்டம் தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ளார். இவருடைய மகன் ராம் சரணும் முன்னணி நடிகராக உள்ளார்.
இதையும் படியுங்க : கமல், கேப்டன் மகனுக்கு கிரீன் சிக்னல்? வானதிக்கு வானவெடி தான்.. முடிவு கொடுத்த சந்திப்பு!
இந்த நிலையில் பிரம்மா ஆனந்தம் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவியிடம், ராம் சரணின் மகள் கிளிங்காரா குறித்து கேள்வி ழுப்பட்டது.
இது தொடர்பாக சிரஞ்சீவி பேசியது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அவர் பேசியதாவது, சில சமயம் என் வீட்டில் நான் இருக்கும் போது லேடீஸ் வார்டன் போல உணர்கிறேன்.
இந்த முறையாவது ஆண் குழந்தை வேண்டும் என ராம்சரணிடம் கேட்டார். வீட்டில எல்லோருமே பெண்கள், பேத்திகள் தான் அதிகம் உள்ளதாகவும், இந்த முறை பேரன் வேண்டும். மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயம் உள்ளதாகவும் சிரஞ்சீவி பேசினார்.
சிரஞ்சீவியின் இந்த கருத்து நெட்டிசன்களிடையே கண்டனத்தை குவித்து வருகிறது. நகைச்சுவையாக அவர் பேசியிருந்தாலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது
ஒரு சிலர் உங்கள் உண்மையான மனநிலையை கூறிவிட்டீர்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். ஏனென்றால் சிரஞ்சீவிக்கு 2 பெண், 1 ஆண் குழந்தை.
அதில் மூத்த மகள் சுஷ்மிதாவுக்கு 2 பெண் குழந்தைகள், இளைய மகள் ஸ்ரீஜாவுக்கும் பெண் குழந்தைகள் பிறந்தன. ராம்சரணுக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது.
கிட்டத்தட்ட அவர் வீட்டில் 10 பெண்கள் உள்ளனர். பேத்திகள் அதிகமாக இருப்பதால் அவர் இவ்வாறு வெளிப்படையாகவே ஆண் வாரிசு வேண்டும் என கூறியிருக்கலாம் என ஆதரவு தெரிவிக்கின்றனர்.