IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!

Author: Selvan
12 February 2025, 7:05 pm

ஹிந்தியில் மட்டும் ஒளிபரப்பு ஏன் ரசிகர்கள் கேள்வி.?

இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!

இதனால் கிரிக்கெட்டை பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.ஏற்கனவே இந்த ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இறுதி போட்டியிலும் இந்தியா வென்று,இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Hotstar Hindi-only telecast controversy

இந்த நிலையில் பிரபல OTT தளமான ஹாட் ஸ்டார் தளத்தில் தங்களுக்கு விருப்பட்ட மொழிகளில் ஆட்டத்தை பார்க்கலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இன்று ஒளிபரப்பான ஆட்டம் ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பானது,இதனால் தமிழக ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிற மாநில ரசிகர்களும் ஷாக் ஆனார்கள்,பலரும் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்,ஒரு பக்கம் இது தொழில்நுட்ப காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும்,சிலர் இது திட்டமிட்ட சதி என கூறி வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் கிரிக்கெட்டிலும் ஹிந்தி திணிப்பு வந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர் ,இதனால் ஆங்கிலம் மற்றும் தமிழ் வர்ணனையில் கேட்கும் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.தற்போது இந்த பிரச்சனையை சரி செய்து பழைய மாதிரி எல்லா மொழிகளிலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!