எல்லாம் சோபிதா வந்த நேரம்.. சமந்தாவை கடுப்பேற்றிய நாகர்ஜூனா?!
Author: Udayachandran RadhaKrishnan12 February 2025, 6:12 pm
மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தாவை புகழ்ந்து தள்ளியிருந்தார் நடிகர் நாகர்ஜூனா.
நாக சைதன்யா -சமந்தா இணை பிரிந்ததற்கு பின், இருவரும் அவரவர் கேரியரில் கவனம் செலுத்தினர். நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்தார்
இதையும் படியுங்க : அடடே…சிம்புவுடன் இணையும் நயன்தாரா…ஆனால் அதுல ஒரு ட்விஸ்ட்..!
இருவரின் திருமணம் ஜோராக நடந்த நிலையில், திருமணத்திற்கு பின் நாக சைதன்யா நடித்திருந்த தண்டேல் படம் சமீபத்தில் வெளியானது.
சமந்தாவை கடுப்பற்ற சோபிதாவை பாராட்டினாரா நாகர்ஜூனா?
சாய்பல்லவி, பப்லு பிருதிவ்ராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த வரவேற்பை குவித்து வருகிறது.
மீனவரான நாக சைதன்யாவை பாகிஸ்தான் போலீசார் கைது செய்வது, அவரை போராடி மீட்டு வருகிறார் சாய் பல்லவி. இது தான் தண்டேல் படத்தின் கதை என்றாலும், காட்சி, பாடல்கள், திரைக்கதையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுவரை படம் 50 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், படத்திற்கு வெற்றியமைய காரணம் சோபிதா தான் என ஒரே போடாக போட்டுள்ளார் நாகர்ஜூனா. இது சமந்தா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா இருந்த போது அவரை போற்றி புகழ்ந்து வந்த நாகர்ஜூனா, தற்போது 2வது மருமகளான சோபிதாவை போற்றி புகழ்கிறார் என்றும், ஒரு வேளை சமந்தாவை கடுப்பேற்ற இப்படி பேசுகிறாரா என்ற விவாதமும் நடந்து வருகிறது.