தனுஷ் ரூட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…திடீரென எடுத்த முடிவு…ஒர்க் அவுட் ஆகுமா.!
Author: Selvan12 February 2025, 8:02 pm
புது அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து பின்பு,விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருக்கும் வேளையில்,ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு,தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார்.
இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!
இந்த படம் வசூல் ரீதியாக அடி வாங்கினாலும்,விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது,படத்தின் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் பிறகு ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி தோல்வி அடைந்தார்,விவகாரத்திற்கு பிறகு எந்த படத்தை இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தனது அப்பாவை வைத்து ‘லால் சலாம்’ படத்தை எடுத்து படு தோல்வியை சந்தித்தார்.
ஒரு பக்கம் அவருடைய முன்னாள் கணவரான தனுஷ் நடிப்பு,இயக்குனர்,தயாரிப்பாளர் பாடகர் என பல வித்தைகளை இறக்கி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார்.இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்ப மும்மரமாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.சமீபத்தில் நடிகர் சித்தார்த்திடம் கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளார்,ஆனால் படத்தை தயாரிக்க யாரும் முன்வராததால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி,தானே படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த முறையாவது இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.