குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
13 February 2025, 10:11 am

சென்னையில், இன்று (பிப்.13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. அதிலும், கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நேற்று குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

Gold Rate today

இதன்படி, இன்று (பிப்.13) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது.. அண்ணாமலைக்கு பயம்.. தமிழிசை சூளுரை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Simbu Nayanthara Vallavan shooting incident நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!
  • Leave a Reply