நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!

Author: Selvan
13 February 2025, 6:15 pm

வல்லவன் பட ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சிம்பு செய்த சேட்டை

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் கிசு கிசுக்கு பெயர் போனவர்கள்,ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஆசான் என்று சொன்னால் அது நயன்தாரா சிம்பு ஜோடி தான்,ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக காதலித்து வந்தனர்,ஆனால் திருமணம் செய்யாமல் இருவரும் பிரிந்தனர்.

இதையும் படியுங்க: முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில்,சிம்பு முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் செய்த ஒரு காரியத்தை அப்பட தயாரிப்பாளரான பி எல் தேனப்பன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Nayanthara Simbu funny incident

அதில் அவர் கூறியது வல்லவன் திரைப்பட ஷூட்டிங் இடத்திற்கு ஒரு நாள் வந்த போது என்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் எடுத்து, நடிகை கோபிகாவின் எண்ணுக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்,அதை பார்த்த கோபிகா எனக்கு போன் போட்டு என்ன சார் இப்படியெல்லம் மெசேஜ் அனுப்புறீங்க என கேட்டார்,நான் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி போனை பார்க்கும் போதுதான் என்னக்கு புரிந்தது.

இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் வல்லவன் பட ஷூட்டிங் முழுவுவதும் அலும்பு செய்து கொண்டிருப்பார்கள் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply