எல்லாமே இசை தான்…நீதிபதியின் கேள்விக்கு இளையராஜா நச் பதில்..!

Author: Selvan
13 February 2025, 7:28 pm

நீதிபதியை திணறடித்த இளையராஜா

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழும் இளையராஜா பாடலுக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.இவருடைய பாடலை வேற யாராவது பயன்படுத்தினால் அதற்கு நஷ்ட ஈடும் கேட்டும் வருகிறார்.

இதையும் படியுங்க: நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!

இந்த நிலையில் தேவர்மகன்,குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக இளையராஜா இன்று ஆஜரானார்,அவரிடம் ஒரு மணி நேரம் பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

Ilaiyaraaja music rights controversy

அப்போது நீதிபதி பி ஆர் ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்,அப்போது அவரிடம் எத்தனை பங்களாக்கள் உள்ளது என கேட்டனர்,அதற்கு அவர் எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால் சொத்து,சுகம் என மற்ற பொருட்களை பற்றி தெரியாது,அதில் நான் கவனம் செலுத்தினால் தனக்கு இசை வராது என்று கூறினார்.

அதன் பிறகு இந்த புகழ்,செல்வம்,பெயர் எல்லாம் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா? என கேட்டபோது,ஆமாம் எல்லாமே சினிமா மூலம் தான் கிடைத்தது,1968 ஆம் ஆண்டு சென்னை வந்த எனக்கு முதலில் அடைக்கலம் கொடுத்தவர் பாரதிராஜா, எனக்கு வேற எந்த விதத்திலும் பணம் வருவதில்லை எனவும்,தயாரிப்பாளர்களிடம் நேரடியாக பணம் வாங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த குறுக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிபதி வழக்கை,மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply