கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!

Author: Selvan
13 February 2025, 10:05 pm

வாழ்க்கையில் திருமணம் மட்டும் பண்ணவே கூடாது

இப்போ இருக்கிற காலகட்டத்தில் யாரும் திருமண செய்யாதீர்கள் என தமன் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் தமன்,இவர் அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் தனக்கு பிடித்த இசைத்துறையை கையில் எடுத்தார்.

இதையும் படியுங்க: நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?

இவர் பாடகி ஸ்ரீவர்தனி என்பவரை திருமணம் செய்து ஒரு மகன் உள்ள நிலையில்,சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வைரல் ஆகி வருகிறது.அதாவது ஆண்கள் யாரும் திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் திருமணம் செய்ய எந்த வயது சரியாக இருக்கும் என கேட்டபோது,அவர் உடனே “இப்போ இருக்கிற காலகட்டத்தில் யாரும் திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் நான் சொல்லுவேன்”,இப்போ இருக்கிற பெண்கள் எல்லோரும் தனிசுதந்திரத்தை விரும்புகிறார்கள்,சிலர் திருமணம் ஆனாலும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தான் யோசிக்கிறார்கள்,கொரோன காலத்திற்கு பிறகு இது மிகவும் அதிகரித்துள்ளது.

வெளிநாடு கலாச்சாரத்தின் படி நாம் சென்று கொண்டிருக்கிறோம்,வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள எந்த பெண்மணியும் இப்போ விரும்புவதில்லை,இதனால் நான் யாருக்கும் திருமணம் செய்ய அறிவுரை கூற மாட்டேன்,மிகவும் கஷ்டமான காலத்தில் நாம எல்லோரும் பயணம் செய்கிறோம் என அந்த பேட்டியில் தமன் தெரிவித்திருப்பார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!