பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!
Author: Selvan15 February 2025, 7:21 pm
அமரன் 100 வது நாள் வெற்றி விழா
கடந்த வருடம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வசூலை குவித்ததோடு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: ரசிகர்களிடம் பத்திக்கிச்சா ‘ஃபயர்’…படத்தின் விமர்சனம் எப்படி.!
மேஜர் முகுந்த் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்குனர் ராஜுக்குமார் பெரியசாமி எடுத்திருந்தார்,இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது,படம் 100 நாட்களை கடந்ததை முன்னிட்டு படக்குழு நேற்று சென்னையில் வெற்றி விழா நடத்தியது.

விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கு அமரன் திரைப்படம் தான் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது,கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது,இந்த நிலையில் நேற்றைய விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்,கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் மட்டும் தான் தனக்கு படம் ரிலீஸ் ஆவதற்கு 6 மாதங்கள் முன்னாடியே முழு சம்பளத்தையும் கொடுத்தனர்.
பிற தயாரிப்பு நிறுவனங்கள் படம் ரிலீஸ் ஆன பிறகு பாதி சம்பளத்தை புடிங்கி விட்டுறாங்க என வெளிப்படையாக பேசியுள்ளார், சிவகார்த்திகேயன் அவருடைய கரியரில் வெளியான தோல்வி படங்களின் தயாரிப்பாளர்களை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.