விடாமல் துரத்தும் ‘விடாமுயற்சி’…10 நாளில் செய்துள்ள சாதனை எவ்வளவு.!
Author: Selvan16 February 2025, 1:08 pm
விடாமுயற்சி வசூல் பாதை
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்பம் பாக்ஸ் ஆபிசில் வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆமை வேகத்தில் படத்தின் வசூல் நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கட்டுப்பாட்டை இழந்த கார்..விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி.!
படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில் ரசிகர்கள் கூட்டம் மந்தமாக காணப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் பெப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு,பல சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்துள்ளதால்,குறைவான திரையில் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் திரையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல் வித்தியாசமான கதையை கொண்டுள்ளதால்,விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது படத்தின் 10 நாள் வசூல் வெளியாகியுள்ளது,அதன்படி தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 89 கோடி வரை வசூல் செய்துள்ளது,உலகளவில் மொத்தமாக 127 கோடி வசூலை விடாமுயற்சி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.