சத்தியமா உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. எஸ்கேப்பான மாணவர்.. தி.மலையில் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
18 February 2025, 12:45 pm

திருவண்ணாமலையில், 17 வயது நர்சிங் மாணவியைக் கர்ப்பமாக்கிய 18 வயது மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை சில மாதங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து நட்பாகப் பழகிய அம்மாணவர், பிறகு மாணவியைக் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஒருகட்டத்தில் மாணவியை நேரில் வந்து சந்தித்தும் அம்மாணவர் பேசியுள்ளார். பின்னர், உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லி, மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாணவி உடல் சோர்வாக காணப்பட்டதால், பெற்றோர் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Nursing student pregnant by college student in Tiruvannamalai

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, இது குறித்து மவந்தவாசி மகளிர் போலீசாருக்கு ருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்.. அப்போ அதிரடி வசூல்தான்!

இதனைத் தொடர்ந்து, மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த மாணவர் மாயமாகிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!