எனக்கு இன்னொருத்தி செட் ஆகவே மாட்டா… விஜய் ஓபன் டாக்!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 12:34 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகரகாக இருக்கும் விஜய் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் பக்கம் எட்டிபார்த்துள்ளார். இதனால் சினிமாவில் தொடர மாட்டார் என்ற செய்தி, அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்.. அப்போ அதிரடி வசூல்தான்!
ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய், தொடர்ந்து தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக இறங்குகிறார். இதனிடையே விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்க்கு திரிஷாவுக்க நெருக்கம் அதிகரித்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மனைவி குறித்து விஜய் ஓபன் டாக்
ஆனால் விஜயோ, திரிஷாவோ, இதை பற்றி எல்லாம் பேசி தங்களது நேரத்தை வீணடிக்காமல் நண்பர்கள் போல பொதுவெளியில் சுற்றி வருகின்றனர். மேலும், அவர்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், என் தாய்க்கு ஒரு ரசிகை கடிதம் எழுதியிருந்தார். அதில் உங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டு கிச்சனில் சமைக்க வேண்டும் என்று ஆசை என கூறியிருந்தார்.
அவர் வேறு யாருமில்லை என் மனைவி சங்கீதாதான். அதே போல் நிறைய மெயில், கடிதம் எனக்கு வருவதாக மனைவியை மிரட்டியிருக்கிறேன், ஆனால் எனக்கு வேறு யாரும் செட் ஆகமாட்டாங்க என்று சங்கீதாவுக்கு நல்லாவே தெரியும். அனதால் அவரை பொறுத்தவரை எனக்கு பயம் எல்லாம் இல்லை என கூறியுள்ளார்.