எந்த ஊரு ஆட்டக்காரி? அடேங்கப்பா.. ஆர்யாவோட மனைவியா இது?

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2025, 3:59 pm

தமிழ் சினிமாவுக்கு நடிகை சாயிஷாவை அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் ஏஎல் விஜய். ரவி மோகன் நடிப்பில் வெளியான வனமகன் படம் மூலம் அறிமுகமானார்.

இதையும் படியுங்க: GOAT வசூல் இவ்வளவுதானா? உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா கல்பாத்தி!

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த போது, இருவருக்கும் காதல் மலர, அது திருமணத்தில் முடிந்தது. கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, காப்பான், டெட்டி போன்ற படங்களில் நடித்தார் சாயிஷா.

சாயிஷா நடனமாடியா வீடியோ வைரல்

பின்னர் 2021ஆம் ஆண்டு குழந்தை பெற்ற பின்னர், நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால் 2023ஆம் ஆண்டு வெளியான பத்து தல படத்தில் ஐட்டம் டான்ஸராக தனது பயணத்தை துவங்கினார்.

சாயிஷாவுக்கு ப்ளஸ் பாயிண்ட்டே அவரது நடனம்தான். ராவடி பாடலில் செம குத்தாட்டம் போட்ட சாயிஷாவை என்னடா இவங்க ஐட்டம் டான்ஸரா மாறிட்டாங்களே என்று எண்ணத் தோன்றியது.

ஆனால் அதன் பிறகு வாய்ப்பில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது இன்கேம் இன்கேம் பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply