21 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராஃப் : சிலிர்க்க வைத்த AI வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 6:55 pm

2004ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில், தயாரிப்பில், எழுத்தில் வெளியான படம் ஆட்டோகிராஃப். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக இது அமைந்தது.

பள்ளி பருவம், இளமை பருவம், தற்போதைய பருவம் என 3 பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல், வாழ்க்கை, சோகம் என அழகாக படத்தை எடுத்திருப்பார் சேரன்.

இதையும் படியுங்க : கணவருக்கு துரோகம்.. ரசித்து செய்தேன்.. எல்லாம் அவரால் தான் : நடிகை மாளவிகா ஓபன்!

மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா என அனைவருக்கு சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து மனதை நீங்காதவாறு காட்சிப்படுத்தியிருப்பார் சேரன்.

Re Release of Autograph Movie AI Video

பரத்வாஜ் இசையில் 8 பாடல்களும் செம ஹிட். ஒவ்வொரு பூக்களுமே பாடல் எழுதிய பா. விஜய், பாடிய கேஎஸ் சித்ரா உட்பட 3 தேசிய விருதுகளை குவித்தது ஆட்டோகிராஃப்.

Autograph Re Release

இந்த படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக தற்போது AI மூலம் ஆட்டோகிராஃப் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 21 வருடங்களுக்கு பிறகு ஆட்டோகிராஃப் படம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..