தியேட்டரில் திணறுகிறதா ‘விடாமுயற்சி’ …கேள்விக்குறியாகும் லைக்கா நிறுவனம்.!
Author: Selvan20 February 2025, 5:10 pm
அஜித்தின் விடாமுயற்சி தோல்வியா
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்க: இந்த வார தியேட்டரில் கொத்தா இறங்கும் 10 படங்கள்..!
படத்திற்காக தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதுனு சொல்லலாம்,வழக்கமான அஜித் படத்தின் மாஸ் காட்சிகள் ஏதும் இல்லாமல் ஒன்லைன் ஸ்டோரியாக படம் எடுக்கப்பட்டுள்ளதால்,ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவந்தது.முதல் 10 நாட்கள் அஜித் படம் என்பதால் வசூல் மின்னல் வேகத்தில் சென்றது,ஆனால் நாட்கள் போக போக மற்ற புது படங்களின் வருகையால் தியேட்டரில் காட்சியும் குறைந்துள்ளது.

இதனால் வசூல் மந்தமாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரை உலகளவில் 134 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாளை தனுஷின் நிலவுக்கு மேல் என்னடி கோபம் திரைப்படமும்,பிரதீப்பின் டிராகன் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் விடாமுயற்சியின் வசூல் கேள்விக்குறியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .