பிரபல இயக்குநர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை : சொத்துகள் முடக்க.. சென்னையில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2025, 7:57 pm
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரம்மாண்ட இயக்குநர்தான் ஷங்கர். காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தவர்.
இதையும் படியுங்க: நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!
தொடர்ந்து ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2,0 படம் எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் இந்தியன் 2 படம் தோல்வியை தழுவியது.
இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
பின்னர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். சமீபத்தில் அந்த படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாமற்றத்தில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால் அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அப்போது 3 மணி நேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் ஷங்கர் , இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்ன் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ₹10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.